தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அக்.7 அதிமுக, முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வாய்ப்பில்லை' - நயினார் நாகேந்திரன் ஆரூடம் - பாஜக துணைத்தலைவர்

விருதுநகர் : அக்டோபர் 7ஆம் தேதி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வாய்ப்பில்லை என்றும், இந்த அறிவிப்பு தள்ளிப்போகும் என்றும் மாநில பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

nainar nagendran
அக்.7ல் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பில்லை'- நயினார் நாகேந்திரன்

By

Published : Sep 30, 2020, 4:21 PM IST

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பாஜகவின் விருதுநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் செயல் வீரர்கள் ஆலோசனைக்கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பாஜகவின் துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது வரும் 7ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இல்லை. இந்த அறிவிப்பு தள்ளிப்போகும்” என்றும் தெரிவித்தார்.

மேலும், அதிமுகவில் யாரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தாலும் தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் எனக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசு அமைத்துள்ள கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர்கள் இடம்பெறுவதை தான் வரவேற்பதாகவும் தெரிவித்தார். மேலும், வேளாண் திருத்தச் சட்டங்களை வைத்து தமிழ்நாட்டில் திமுக அரசியல் செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சதுரகிரி கோயிலில் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை - கோயில் நிர்வாகம்

ABOUT THE AUTHOR

...view details