விருதுநகர் மாவட்டம், அருகேயுள்ள மல்லாங்கிணறு கிராமத்தில் சுமார் 4 ஆயிரம் பங்குதாரர்களைக் கொண்டு இயங்கும் சீட்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை நபார்டு வங்கியின் தலைவர் சிந்தாலா பார்வையிட்டார்.
அப்போது, மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிக்கும் முறைகளையும் அதன் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அவர்ல், "சீட்ஸ் போன்ற உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பல்வேறு வங்கிகள் மூலம் நபார்டு வங்கி குறைந்த வட்டியில் பல்வேறு வகையான கடன் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது.
சுமார் 90 லட்சம் வியாபார குழுக்களுக்கு நபார்டு வங்கி கடனுதவி அளித்துள்ளது. உணவுப்பொருள் உற்பத்திக்கான சிறப்பு கடன் திட்டம் ஒன்றை அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கிவைக்க உள்ளோம்.
இரு நாள்களில் தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். அப்போது, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் உரம் தயாரிக்க திட்டங்கள் வழங்குமாறு தெரிவிக்க உள்ளோம்.