தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இஸ்லாமியர்கள் வாக்களிக்காமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்குமா?' - சி.ஏ.ஏ. குறித்து அமைச்சர்களிடம் பெண் முறையீடு - Women arguement with Sellur Raju

விருதுநகர்: அமைச்சர்களிடம் இஸ்லாமிய பெண் சி.ஏ.ஏ. குறித்து கேள்வி எழுப்பி முறையிட்டதால் அரசு நிகழ்ச்சியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

muslim
muslim

By

Published : Mar 15, 2020, 2:43 PM IST

Updated : Mar 15, 2020, 3:05 PM IST

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் சார்பில் விருதுநகரில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையம் தொடக்க விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டனர். இதன் இறுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அப்போது, முகமது நிலோபர் பாத்திமா என்பவர் அமைச்சர்களிடம் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. குறித்து கேள்வி எழுப்பி முறையிட்டார். மேலும், அப்பெண், இஸ்லாமியர்கள் இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்க முடியுமா என வினா தொடுத்தார்.

சி.ஏ.ஏ. குறித்து அமைச்சர்களிடம் பெண் முறையீடு

இதையடுத்து, அமைச்சர்கள் அப்பெண்ணிடம் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்கமளிக்க முயன்றனர். ஆனால் அப்பெண் தொடர்ந்து அதுகுறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து அப்பெண் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

Last Updated : Mar 15, 2020, 3:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details