தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரி மாணவன் கொலையின் முன்விரோதம்: ஆட்டோவிற்கு தீவைப்பு - Fire to Virudhunagar Auto

விருதுநகர்: ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் கல்லூரி மாணவன் கொலையின் முன்விரோதம் காரணமாக ஆட்டோவிற்கு தீவைத்த நபரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ஆட்டோவிற்கு தீவைப்பு
ஆட்டோவிற்கு தீவைப்பு

By

Published : Apr 19, 2020, 3:51 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்துவந்த கல்லூரி மாணவரான தாமரைக்கனி கடந்த சில தினங்களுக்கு முன் முன்விரோதத்தால் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் கைதான அண்ணாமலை ஈஸ்வரன் என்பவரது ஆட்டோவினை இன்று அதே பகுதியினைச் சேர்ந்த அய்யனார் என்பவரால் தீவைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளனர்.

ஆட்டோவிற்கு தீவைப்பு

தகவலறிந்த சேத்தூர் ஊரக காவல் துறையினர் ஆட்டோவைக் கைப்பற்றி, கல்லூரி மாணவன் கொலை சம்பந்தமாக முன்விரோதத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என வழக்குப்பதிவு செய்து அய்யனார் (24) என்பவரைக் கைதுசெய்தனர்.

பழிக்குப் பழியாக சம்பவம் அரங்கேறுவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க: இருமல், சளி காரணமாக பெண் உயிரிழப்பு; கரோனா என மக்கள் அச்சம்

ABOUT THE AUTHOR

...view details