மதுரை கருப்பாயூரணி அருகே மேல்பனங்காடி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் இருச்சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை குலசேகரநல்லூர் பஞ்சு ஆலை அருகே சென்று கொண்டிருந்தபோது, இரண்டு இருச்சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களால் அவரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட, திருச்சுழி காவல் துறையினர், இதில் தொடர்புடைய மதுரை மேலப்பனங்காடி பகுதியைச் சேர்ந்த வசந்த், வேலன், விஜய், கார்த்தி ஆகிய நான்கு பேரை கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆணின் எரிந்த தலை... நெடுஞ்சாலையில் கண்டெடுப்பு; போலீஸ் விசாரணை!
தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொலை பழிக்கு பழியாக நடத்தப்பட்ட மூன்றாவது கொலை என அவர்களது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு தற்போது கொலை செய்யப்பட்ட மணிகண்டன் என்பவரின் சகோதரியின் கணவர் கருப்பசாமி என்பவர் கட்டட ஒப்பந்தப்புள்ளி எடுப்பது சம்பந்தமாக அலங்காநல்லூர் பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது சகோதரியின் கணவரை கொலைச் செய்த மேல பனங்காடி பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவரை, 2018ஆம் ஆண்டு சிவகங்கை சாலை விளத்தூர் பகுதியில் இருச்சக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து, அரிவாளால் வெட்டி, இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஊற்றி எரித்து மணிகண்டன் குழு கொலை செய்துள்ளது.
பல பெண்களிடம் சேட்டை... கம்ப்யூட்டர் இன்ஜினியர் கைது!
இக்கொலை சம்பவம் தொடர்பாக அரவிந்தனின் சகோதரர் வசந்த், தனது சகோதரரை கொலை செய்தவரைப் பழிக்கு பழிவாங்க எண்ணி திட்டம் தீட்டி வந்துள்ளார். இவ்வேளையில் அரவிந்தன் கொலை வழக்கில் பிணையில் வெளிவந்த மணிகண்டன், தன்னை கொலை செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் தனது சொந்த ஊரான திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திற்குச் சென்றுத் தங்கியுள்ளார்.
இதனையறிந்த வசந்த் தனது நண்பர்களுடன் அவரை பின்தொடர்ந்து சென்று இருச்சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த மணிகண்டனை குலசேகரநல்லூர் அருகே வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியதாக வசந்த் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளர்.
இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய நான்கு நபர்கள் மீதும் கொலை வழக்கு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி காவல் துறையினர் சிறையிலடைத்தனர். தொழில் போட்டி காரணமாக பழிக்குப்பழியாக மூன்று தொடர் கொலை சம்பவங்கள் நடைபெற்றது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.