முன்னாள் திமுக அமைச்சர் தங்கபாண்டியன் மனைவியும், முன்னாள் அமைச்சரும் விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசு மற்றும் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் தாயாருமான ராஜாமணி தங்கபாண்டியன் (84) வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார்.
தமிழச்சி தங்கபாண்டியனின் தாயார் காலமானார்
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் தாயார் ராஜாமணி தங்கபாண்டியன் காலமானார்.
Rajamani Thangapandian
அவருடைய இறுதி ஊர்வலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அவருடைய சொந்த கிராமமான மல்லாங்கிணறில் நாளை (அக்.05) 4 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மல்லாங்கிணறு கிராமத்தில் உள்ள தங்கப்பாண்டியன் சமாதி அருகே இவரது உடலும் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
ராஜாமணி தங்கபாண்டியன் மறைவு குறித்து தகவலறிந்த கட்சியினர் மற்றும் அக்கிராம பொதுமக்கள் தங்கம் தென்னரசு இல்லத்தில் இருக்கும் அவரது தாயாரின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Last Updated : Oct 4, 2020, 10:31 PM IST