விருதுநகர் தேசபந்து மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நீட் தேர்வை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது, நீட் தேர்வுக்கு எதிராக பதாகைகளை ஏந்திக் கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் மேல் குறைந்துள்ளது. ஏழை, நடுத்தர மக்களை வஞ்சிக்க கூடியதாக இத்தேர்வு அமைந்துள்ளது. கரோனா காலத்தில் நீட் தேர்வை நடத்துவது மிகவும் அவமானகரமான செயலாகும். மேலும் இத்தேர்வு மாணவர்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலாக உள்ளது” என்றார்.
விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்ச் சந்திப்பு மேலும் நீட் தேர்வை நிறுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றத்தை எதிர்க்கட்சிகள் நாடியுள்ளது என்றும் மாணவர்கள் மீது அக்கறை உள்ளதாக கூறப்படும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடாமல் இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க...கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் கவலைக்கிடம்