திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு, எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் தாயார் ராஜாமணி அம்மாள் (84) கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் தாயார் உயிரிழப்பு: எம். பி கனிமொழி ஆறுதல் - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தாயார் உயிரிழப்புக்கு ஆறுதல்
விருதுநகர்: திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தாயார் உயிரிழந்ததை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் நாடாளமன்ற உறுப்பினர் கனிமொழி அஞ்சலி செலுத்தினார்.
MP kanimozhi console for thangam thenarasu mother death
மல்லாங்கிணறில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் நினைவிடம் அருகே ராஜாமணி அம்மாளின் உடலும் நேற்று (அக். 5) நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், மல்லாங்கிணறுக்கு வந்த எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் எம். பியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் ராஜாமணி அம்மாள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.