தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் சீண்டலில் மகளை துன்புறுத்திய திமுக ஊராட்சிமன்றத்தலைவரின் மகன் - கைது செய்யக்கோரி தாய் தற்கொலை முயற்சி - mother who tried to commit suicide by pouring petrol for the reason of sexually abused her daughter

விருதுநகர் ஆட்சியர் வளாகத்தில் பாலியல் ரீதியாக, தனது மகளை துன்புறுத்திய திமுக ஊராட்சிமன்றத் தலைவர் மகனை கைது செய்யக்கோரி தாய் மற்றும் மகன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

பாலியல் சீண்டலில் மகளை துன்புறுத்திய திமுக ஊராட்சிமன்ற தலைவர் மகனை கைது செய்ய கோரி தாய் தற்கொலை முயற்சி
பாலியல் சீண்டலில் மகளை துன்புறுத்திய திமுக ஊராட்சிமன்ற தலைவர் மகனை கைது செய்ய கோரி தாய் தற்கொலை முயற்சி

By

Published : Apr 26, 2022, 8:06 PM IST

விருதுநகர்மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது இளம்பெண்ணுக்கும், அதேபகுதியில் ஊராட்சி மன்றத்தலைவராக இருக்கும் செந்தாமரையின் மகன் சுலைமானுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து, சுலைமான் அந்த பதினாறு வயது சிறுமிக்குச் செல்போன் வாங்கி கொடுத்து, அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.

இதனை அறிந்த அந்தச்சிறுமியின் பெற்றோர், செல்போனை சிறுமியிடம் இருந்து பறித்து சுலைமானிடம் கொடுக்க சென்றபோது சுலைமான் குடும்பத்தார்கள், செந்தாமரை மற்றும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் சகோதரரை கடுமையாக அடித்ததாகக் கூறப்படுகிறது.

இருக்கன்குடி கிராம ஊராட்சி மன்றத்தலைவர் செந்தாமரை
இதனிடையே, பாலியல் ரீதியாக தனது மகளை துன்புறுத்திய சுலைமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று (ஏப்ரல்.25) ஆட்சியர் அலுவலகம் வந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் அவரது மகன் இருவரும் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்குள்ள காவல் துறையினர் அதனைத்தடுத்து, அந்தப் பெண்ணை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது பெட்ரோல் ஊற்றிக்கொண்ட பெண்ணிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிகளை ஈர்த்த மாணவன்... ஆபாச படங்களை காட்டி மிரட்டியதால் கைது...

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details