விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆறுமுகம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி தேவி. இவருடைய கணவர் முத்து கருப்பு கடந்த ஆண்டு கட்டட வேலை செய்துகொண்டிருக்கும்போது தவறி விழுந்து உயிரிழந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
முதல் மகன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறார். ஆனால், இரண்டாவது மகன் மகாராஜன் (13) மூளை வளர்ச்சி இல்லாமல் படுத்த படுக்கையாக சிரமப்பட்டு வருகிறார். இதுமட்டுமின்றி பாண்டி தேவி வயதான தாயையும் தனது இல்லத்தில் வைத்து கவனித்துவருகிறார்
. மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க பெண் கோரிக்கை மனு இந்நிலையில், தனது வாழ்வாதாரத்திற்கு வழியில்லாத நிலையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்துள்ள பாண்டி தேவி தன்னுடைய தகுதிக்கு ஏற்ற அரசு வேலை தருமாறு கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தார். அதில், மூளை வளர்ச்சியில்லாத தன்னுடைய மகனைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் எனவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'பணமும தரல' 'நடவடிக்கையும் யாருமே எடுக்கல' ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தற்கொலை முயற்சி!