சாத்தூர் அருகே உள்ள ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர நாராயணன் (31). இவரது மனைவி செல்வி (26). இவர்களுக்கு அனுஷ்கா (5) என்ற மகளும், மாதேஸ் (3) என்ற மகனும் உள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சங்கர நாராயணன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இந்நிலையில், இன்று (ஜூன்4) மனைவி செல்வி அதே கிராமத்தைச் சேர்ந்த பொன்பாண்டி என்பவருக்குச் சொந்தமான காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றில் தனது இரண்டு குழந்தைகளையும் வீசிக்கொன்றுவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த சாத்தூர் கதிரேசன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கிணற்றில் இறங்கி 2 குழந்தைகள், தாயை சடலமாக மீட்டனர்.