விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மெகா லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடைபெற்றது. நாடு முழுவதும் நிலுவையில் உள்ள ஏராளமான சிவில், கிரிமினல், விபத்துக் காப்பீட்டு வழக்குகளை விரைவில் முடிப்பதற்காக ’லோக் அதாலத்’ நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் நேற்று (ஏப்.10) ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் மூன்றாயிரத்து 654க்கும் மேற்பட்ட வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் ஆயிரத்து 537 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தொடர்ந்து, நேற்றைய லோல் அதாலத்தில் சுமார் ஐந்து கோடியே 81 லட்சம் மதிப்பிலான தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா வழங்கினார். மேலும் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் நான்கு பேருக்கு அறிவுரைகள் கூறி சமரசம் செய்து நீதிபதிகள் சேர்த்து வைத்தனர்.