தேர்தல் நாள் நெருங்கும் நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் பண பட்டுவாடா செய்வதாக சாத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து அவர் தலைமையிலான பறக்கும் படை குழுவினர், மேலக்காந்தி நகரில் சோதனையில் ஈடுபட்டனர்
அப்போது சாத்தூரைச் சேர்ந்த வெயிலா (50) வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றபோது, கையும் களவுமாக பிடிப்பட்டார். அவரிடமிருந்த 42 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அவரை சாத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர் அதிமுக மகளிரணி அமைப்பு நிர்வாகி உள்ளார்.
இதைப் போலவே குருலிங்காபுரம் பகுதியைச் சேர்ந்த இன்பராஜ் (50) என்பவர் வாக்காளர்களிடம் பணம் கொடுக்கும்போது, சாத்தூர் நகர காவல் துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூபாய் இரண்டாயிரத்தைப் பறிமுதல் செய்து, வழக்குப் பதிவும் செய்துள்ளனர்.