தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜபாளையம் நகராட்சி வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்: திறந்து வைத்த எம்எல்ஏ! - ராஜபாளையம் நகராட்சி வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

விருதுநகர்: ராஜபாளையம் நகராட்சி வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மையத்தை சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டியன் தொடங்கிவைத்தார்.

grievance
grievance

By

Published : Jun 16, 2021, 10:40 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகளை மனுவாக எழுதி கொடுத்து அதற்கு தீர்வு காணும் வகையில், தனியாக ஒரு முகாம் மையத்தை அமைக்க வேண்டும் என அலுவலர்களிடம் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டியன் கூறினார்.

அதனடிப்படையில், ராஜபாளையம் நகராட்சி வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மையத்தை சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டியன் தொடங்கிவைத்தார்.

அதன் பின் பொதுமக்கள் கொடுக்கக்கூடிய புகாருக்கு உடனடியாக ரசீது வழங்கப்பட்டது. மனுக்களை பரிசீலனை செய்வதற்காக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நான் வந்து பார்வையிட்டு மக்களின் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்காகவே இந்த முகாமை திறந்து வைத்ததாக தங்கபாண்டியன் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details