தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேயர் விருப்பம், 20 நாளில் நிறைவேற்றம் தருமபுரி எம்.பி. அசத்தல்! - FM audience requirement

தருமபுரி: நேயர்களின் நீண்ட நாள் கோரிக்கையை, காதுக்கு எட்டிய 20 நாள்களில் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நிறைவேற்றியுள்ளார்.

Minister's quick action on FM audience requirement

By

Published : Nov 1, 2019, 11:56 PM IST

Updated : Nov 2, 2019, 8:37 AM IST

தருமபுரி மாவட்டத்தில் அகில இந்திய வானொலி நிலையத்தின் பண்பலை வரிசை 2007 அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தப் பண்பலை நிலையம் தொடங்க 1997ஆம் ஆண்டில் அதியமான் கோட்டைப் பகுதியில் 7 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது.

இதையடுத்து 1999ஆம் ஆண்டு, பணியாளர்களுக்கான குடியிருப்புகள், உயர் அழுத்த தொலைக்காட்சி மின் கோபுரங்கள், நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்கான அரங்குகள் முதலானவை கட்டி முடிக்கப்பட்டது.

எனினும், பண்பலை நிலையம் அமைப்பதில் சில நிர்வாகத் தடங்கல்கள் இருந்தன. இந்நிலையில், 2002 அக்டோபர் 1ஆம் தேதி சோதனை ஒலிபரப்பு நடந்தது. இருப்பினும் முழு நேர ஒலிபரப்பு நடக்கவில்லை.

இந்நிலையில் தருமபுரி மக்கள் தங்களின் நீண்டநாள் கனவான, இரவும் பண்பலையை ஒலிபரப்ப வேண்டும் என்பது அந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினர் காதுக்கு எட்டியது. இதனையறிந்த எம்.பி. செந்தில்குமார், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து ஒளிபரப்பை நீட்டிப்பு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை மனு அளித்தார்.

தருமபுரி அகில இந்திய வானொலி நிலையம்

இந்த மனுவை பரிசீலித்த மத்திய அமைச்சர், தருமபுரி அகில இந்திய வானொலி நிலைய ஒளிபரப்பு நேரத்தை நீட்டிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மனு வழங்கிய 20 நாள்களிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டு நவம்பர் 1ஆம் தேதியான இன்று முதல் மாலை நேர ஒளிபரப்பைத் தொடங்கியது.

இந்த ஒலிப்பரப்பு காலை 6 மணி முதல் இரவு 11:05 வரை தனது ஒளிபரப்பை நீட்டித்துள்ளது. ஒளிபரப்பு நீட்டிப்பு செய்ய உதவிய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு வானொலி நேயர்கள் தங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

Last Updated : Nov 2, 2019, 8:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details