விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, “இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த ஒரு பாதிப்பும் வராது, அப்படியே பாதிப்பு வந்தால் முதல் ஆளாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை தடுப்பார். முதலமைச்சர் சொன்ன வாக்கை மீறமாட்டார்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி அதிமுக கிடையாது. அதிமுக இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற இயக்கம். அரசியல் லாபத்திற்காக பொய்களைப் பரப்புரை செய்து இஸ்லாமியர்களை தூண்டி திமுகதான் தெருவில் இழுத்துவிட்டது.