விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவ திருச்சபை ஊழியர்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 10 கிலோ வீதம் 2 ஆயிரம் பேருக்கு அரிசிப் பைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதலமைச்சர் சில நிபந்தனைகளுடன் அறிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தப்பட்டு, தொழிற்சாலைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நியாய விலைக் கடைகள் மூலமாக அனைத்து பொதுமக்களுக்கும் நிவாரணப் பொருட்கள் தங்கு தடையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சென்னையை துரத்தும் கரோனா - இன்று 203 பேருக்கு பாதிப்பு!