தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் கொலைசெய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு உதவிய அமைச்சர்!

சிவகாசியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி படுகொலைசெய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், சிறுமி சடலமாக மீட்கப்பட்ட பகுதிக்கும் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

Minister Rajendra Balaji, who consoled the parents of the killed rape victim, அமைச்சர் ரஜேந்திர பாலாஜி உதவி, விருதுநகர் பாலியல் கொலை, virudhunagar rape case
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு உதவிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

By

Published : Jan 22, 2020, 7:44 PM IST

விருதுநகர்: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி படுகொலைசெய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ராஜேந்திர பாலாஜி தன் சொந்த நிதியிலிருந்து ரூ.3 லட்சம் அளித்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று முன்தினம் மாலை இயற்கை உபாதைகளைக் கழிக்கச் சென்ற 8 வயது சிறுமி ஒருவர் மாயமானார். சிறுமியை நீண்ட நேரம் தேடிய பெற்றோர், உறவினர்கள் மாரனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையினர் விசாரணை நடத்திவந்த நிலையில் நேற்று காலையில் முள்புதர்களுக்கு இடையே சிறுமி ஆடைகள் கிழிக்கப்பட்டு இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

வில்சன் கொலை வழக்கு: விசாரணைக்கு மத்திய உளவு பிரிவு நாளை வருகை

சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டது மருத்துவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியானது. இது தொடர்பாக வட மாநில இளைஞர்கள் உள்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர். இச்சூழலில், சிறுமியின் வீட்டிற்கே நேரடியாகச் சென்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறுமியின் பெற்றோர் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு கூடுதல் நிவாரணம் - ஹென்றி டிபேன்

மேலும், தனது சொந்த நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கி உதவிசெய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் ஆகியோர் இருந்தனர். என் மகளுக்கு நேர்ந்தது போல் யாருக்குமே நடக்கக் கூடாது எனக் குழந்தையின் தாய் கதறி அழுதது அனைவரையும் கலங்கச் செய்தது.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலைசெய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு உதவிய ராஜேந்திர பாலாஜி

தொடர்ந்து அவர் சிறுமி படுகொலைசெய்யப்பட்ட இடத்தையும் சென்று பார்வையிட்டார். அப்போது அவரை பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என முழக்கமிட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details