விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “எனக்கென தனிப்பட்ட செல்வாக்கு கிடையாது. ஜெயலலிதாவின் செல்வாக்கை பெற்ற ஒரே காரணத்தால் நான் வெற்றி பெற்றேன். என்னை பிள்ளையை போன்று பார்த்தவர் ஜெயலலிதா. எனக்கு உடல்நிலை பாதித்த போது ஒவ்வொரு மணி நேரமும் அவர் தொலைபேசியில் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
சிறைக்கு சென்றபோதே ஜெயலலிதாவின் பாதி உயிர் பிரிந்துவிட்டது. வெளியே வந்த பின்னர் வெளிநாடு சென்று கவனித்திருந்தால் கூட இன்று வரை அவர் உயிரோடு இருந்திருப்பார். ஆனால், கோடிகோடியாய் சம்பாதித்த கருணாநிதி குடும்பம் உத்தமர் வேஷம் போடுகிறது.
செயல்வீரர்கள் கூட்டத்தில் அழுத அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! பல கோடிகளுக்கு திட்டங்களை செய்துவிட்டு நான் இன்று சிவகாசியில் போட்டியிடாமல், ராஜபாளையத்தில் போட்டியிட காரணம் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்குதான். எனவே, ஜெயலலிதா கண்ட கனவு நாம் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் (அழுகிறார்). தற்போதைய எம்எல்ஏ ராஜவர்மனை ஜெயிக்க வைக்க அவ்வளவு சிரமப்பட்டேன். வெற்றி பெற்ற மூன்றே மாதத்தில் ஆட்சி மாற்றம் இருக்குமா எனக் கேட்டவர் அவர். எனவே, அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும்” என்றார்.
இதையும் படிங்க:பொள்ளாச்சி வழக்கில் நியாயம் கிடைக்க ஸ்டாலின் முதல்வராக வேண்டும்!