தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.30 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

விருதுநகர்: சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடிக்கல் நாட்டி இன்று தொடங்கிவைத்தார்.

minister rajendra balaji
ரூ. 30 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

By

Published : Oct 3, 2020, 8:49 PM IST

சிவகாசி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட திருத்தங்கலில் இருந்து ஆலமரத்துப்பட்டி செல்லும் சாலை 20 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ளது.

மேலும், நாரணாபுரம், விஸ்வநத்தம், சித்துராஜபுரம், ஆணையூர், தேவர்குளம், செங்கமலநாச்சியார்புரம் ஆகிய ஊராட்சிக்குள்பட்ட 10 இடங்களில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டுப்படவுள்ளது. இப்பணிகளை, தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இந்நிகழ்வின் போது, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். சுகாதார வளாகங்கள் செயலற்று இருப்பதாக மக்கள் சிலர் கூறியதையடுத்து, மாவட்டத்தில் உள்ள செயல்படாமல் உள்ள சுகாதார வளாகங்களை செயல்படும் விதமாக அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஆவண செய்யவேண்டும் என அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க பெரியகுளம் பண்ணை வீட்டில் குவிந்த அதிமுக மாவட்ட நிர்வாகிகள்!

ABOUT THE AUTHOR

...view details