விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நேற்று(நவ-18) நடைபெற்றது.
'தமிழ்ப் பெயர் இல்லை... அதனால் தமிழைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு யோக்கியதை இல்லை' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு - Minister Rajendra Balaji
விருதுநகர்: ஸ்டாலின் வைத்திருக்கும் பெயரே தமிழ்ப் பெயர் கிடையாது என்பதால் அவருக்கு தமிழைப் பற்றிப் பேசும் யோக்கியதை கிடையாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
அப்போது பேசிய அவர், "விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக கூட்டம் போட்டாலே அனைவருக்கும் மட்டன் சாப்பாடு தான். அனைவருக்கும் சாப்பாடு போட்டு அரசியல் செய்யும் இயக்கம் அதிமுக. திமுக ஒரு ஐம்பெரும் தலைவர்களை மட்டுமே கொண்டுள்ள கட்சி. அந்த கட்சி வடநாட்டவரான பிரசாந்த் கிஷோரை நம்பி தான் உள்ளது. அவர் சொன்னால் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்களா.
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் என யாருடைய ஓட்டும் திமுகவுக்குக் கிடைக்காது. வாடி வதங்கி நொந்து நூலாகி சாகும்வரை திமுகவிறகு ஓட்டுப் போட நினைப்பவர்கள் மட்டும் தான் ஓட்டுப் போடுவார்கள். ஸ்டாலினின் திமுக பத்துக்கு பத்து அறையில் உள்ளது, அண்ணா ஆரம்பித்த திமுக தற்போது இல்லை. ஸ்டாலின் வைத்திருக்கும் பெயரே தமிழ்ப் பெயர் கிடையாது. அதும் ரஷ்ய நாட்டின் பெயரை வைத்துக்கொண்டு தமிழைப் பற்றிப் பேசும் யோக்கியதை ஸ்டாலினுக்கு கிடையாது. தமிழர்களைப் பற்றிப் பேசும் உரிமை அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமே உண்டு. தமிழருக்கும் தமிழுக்கும் துரோகம் செய்து தமிழை விற்றுப் பிழைக்கும் கூட்டம் தான் திமுக" என்றார்.