தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இன்னல்களும் வரும் - ராஜேந்திரபாலாஜி - திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இன்னல்களும் வரும்

திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற மக்களை இன்னல்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும் என்பதை இந்த ஆட்சி மீண்டும் நிரூபித்திருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இன்னல்களும் வரும்
திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இன்னல்களும் வரும்

By

Published : Apr 26, 2022, 3:26 PM IST

Updated : Apr 26, 2022, 4:02 PM IST

தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக அதிமுக கழக அமைப்பு தேர்தலில் மாவட்ட செயலாளர் மாவட்ட பொருளாளர் கழக அவைத்தலைவர் உள்ளிட்ட 9 பதவிக்கான தேர்தல் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்டத்துக்கு அதிமுகவின் கழக அமைப்பு தேர்தல் மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

மேலும் தேர்தல் பொறுப்பாளர்களாக கழக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், இளைஞர் மற்றும் இளம்பெண்கள், பாசறை துணைச் செயலாளர் கிஷோர் ஆகியோர் தேர்தல் மேற்பார்வையாளாராக கலந்துகொண்டனர். இந்த நிலையில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.டி ராஜேந்திர பாலாஜி மனுவை தாக்கல்செய்தார்.

மேலும் மாவட்ட கழகத் அவைத்தலைவர், மாவட்ட துணைச் செயலாளர், மாவட்ட பொருளாளர், மாவட்ட இணைச்செயலாளர், மாவட்ட பிரதிநிதி என ஒன்பது பதவிகளுக்கு அதிமுகவினர் விறுவிறுப்பாக வேட்புமனுக்களை தேர்தல் பொறுப்பாளர்களிடம் தாக்கல் செய்தனர்.

திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இன்னல்களும் வரும்- ராஜேந்திர பாலாஜி

இந்த நிலையில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தலில் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவித்தனர். போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்ட மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கு அதிமுகவினர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, ”சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் அதிமுகவிற்கு சாதகமாக அமையவில்லை முடிவுகள் வேறு ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் அதிமுகவிற்கு சாதகமாகத்தான் அமையும்” என்றார்.

தொடர்ந்து பேசிய கே.டி. ராஜேந்திர பாலாஜி, “திமுக ஆட்சியில் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். எல்லா விலைவாசியும் உயர்ந்து விட்டது. மத்திய அரசை குறை கூறியே காலம் தள்ள முடியாது என இந்த அரசு உணர வேண்டும். அதை உணர்த்தும் விதமாக மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள்” என்றார்.

மேலும் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மின்வெட்டு விலைவாசி உயர்வு போன்றவைகள் மக்களை இன்னல் படுத்தும் நிகழ்வுகள் நடக்கும் என்பதை இந்த ஆட்சி மீண்டும் நிரூபித்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை அதிமுக நிர்வாகிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேர்தல் வரும் வரை காத்திருக்காமல் தற்போதே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கழகப் பணிகளை தொடங்க வேண்டும். இனி எப்போது சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல் வந்தாலும் அதிமுகவிற்கு சாதகமாகத்தான் அமையும்” என்று பேசினார்.

இதையும் படிங்க:உங்களை வரவேற்க வரும் அமமுகவினரை தினகரன் கட்சியை விட்டு நீக்குகிறாரா ? சசிகலாவின் பதில் என்ன?

Last Updated : Apr 26, 2022, 4:02 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details