விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர் ஊரக காவல் நிலைய தலைமைக் காவலர் அய்யனார் என்பவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். அதையடுத்து அவர் 10 நாள்களுக்கு முன்பு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் உயிரிழந்த தலைமைக் காவலரின் வீட்டிற்கு மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் பெருமாளுடன் இன்று(ஜூலை 16) நேரில் சென்ற பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.3 லட்சம் நிவாரணத்தை, தனது சொந்த பணத்திலிருந்து வழங்கினார்.