தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜீவ் காந்தி பொய் சொல்லி ஓட்டு கேட்கிறார்: ராஜேந்திர பாலாஜியின் புது உருட்டு! - ராஜீவ் காந்தி

விருதுநகர்: ராகுல் காந்தி பொய் சொல்லி ஓட்டு கேட்கிறார் என கூறுவதற்கு பதில் ராஜீவ் காந்தி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது வைரலாகி வருகிறது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

By

Published : Mar 28, 2019, 1:41 PM IST

ஜெயலலிதா உயிரிழந்தபிறகு கூண்டுக்குள் இருந்த கிளிகள் சுதந்திரம் பெற்றது போல் அமைச்சர்கள் பேசிவருவதாக எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர். அந்தவகையில் மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால் அதிமுக அமைச்சர்கள் பரப்புரையிலும், எதிர்க்கட்சியினரை குற்றம்சாட்டுவதிலும் முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.72,000 தருவேன் என பொய் சொல்லி ராகுல் காந்தி ஓட்டு கேட்கிறார்” என கூறுவதற்கு பதிலாக ராஜீவ் காந்தி ஓட்டு கேட்கிறார் என தெரிவித்தார்.

ராஜேந்திர பாலாஜியின் புது உருட்டு என அமைச்சரின் இந்த பேச்சை சமூக வலைதளவாசிகள் பகிர்ந்து வருகின்றனர். மேலும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோல் பேசினால் கட்சியின் நிலைமை இத்தேர்தலில் என்னாகுமோ என ரத்தத்தின் ரத்தங்கள் கவலைப்படுவதாகக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details