விருதுநகர் மாவட்டம் அதிமுக கூட்டணி மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரப்புரை மேற்கொண்டார்.
காங்கிரஸ், திமுக தேர்தல் அறிக்கைகள் மடத்தனமானது - ராஜேந்திர பாலாஜி! - பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்: காங்கிரசின் தேர்தல் அறிக்கை சிறுபிள்ளைத்தனமானது என்றும் திமுகவின் தேர்தல் அறிக்கை மடத்தனமானது எனவும் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ், திமுக தேர்தல் அறிக்கைகள் மடத்தனமானது -ராஜேந்திர பாலாஜி!
அப்போது பேசிய அவர், அம்மாவையும் சின்னம்மாவையும் சிறைக்கு அனுப்பிவிட்டு கட்சியை கையகப்படுத்த டிடிவி தினகரன் எண்ணியதால்தான், தினகரனை கட்சியை விட்டு அம்மா வெளியே அனுப்பினார். அதனால் தான் சசிகலாவை சிறையிலிருந்து இன்றளவும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டினார்.
மேலும், காங்கிரசின் தேர்தல் அறிக்கை சிறுபிள்ளைத்தனமாகவும், திமுகவின் தேர்தல் அறிக்கை மடத்தனமாமாக உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.