தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியல் நாடகமாடுகிறார் ஸ்டாலின் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாடல் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாடல்

விருதுநகர்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அரசியல் நாடகமாடுவதாகவும் ஏசி ரூமில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

minister-rajendra-balaji
minister-rajendra-balaji

By

Published : May 31, 2020, 9:16 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நடுவப்பட்டி, ஈஞ்சார் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் 60 லட்சம் மதிப்பீட்டிலான குடிமராமத்து பணிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விருதுநகர் மாவட்டம் முழுவதும் 54 கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது எனவும், இதன்மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது எனவும் கூறினார். மதுக்கடைகளை அரசு விரும்பி திறக்கவில்லை என்ற அவர், மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கைகளில் முதலமைச்சர் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

minister-rajendra-balaji

திமுக சார்பில் கிராமசபை மூலம் பெறப்பட்ட மனுக்கள் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் நாடகமாடுவதாகவும் ஏசி ரூமில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் என்றும் விமர்சித்தார்.

மேலும், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளால் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருப்பதாக தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details