தமிழ்நாடு முதலமைச்சருடன் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று தனது சொந்த மாவட்டமான விருதுநகருக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு அதிமுக சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தினகரன் திமுகவில் இணைவார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - mk stalin
விருதுநகர்: டிடிவி தினகரன் திமுகவில் இணைவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
”இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு சென்றதன் நோக்கம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் பால்வளத்துறையை வளர்ச்சி நோக்கி கொண்டு செல்வதற்காகவும்தான். சேலத்தில் மிகப்பெரிய பால்பண்ணை அமைப்பதற்கான பணி இன்று தொடங்குகிறது. அதில் கால்நடை ஆராய்ச்சி மையம், பால்பண்ணை இனவிருத்தி என மிகப்பெரிய பால்பண்ணை அமைக்கப்படும் என்றார்.
தொடர்ந்து கூறிய அவர், டிடிவி தினகரனுக்கு இனி அரசியல் வாழ்க்கை கிடையாது. அவர் கூடாரம் காலியாகி விரைவில் திமுகவில் சேர்ந்துவிடுவார்” என்றார்.