தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தூர் கல்லூரி பேருந்து விபத்து - காயம் அடைந்த மாணவிகளின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் - தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவிகளின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சாத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து: 27-க்கும் மேற்பட்ட மாணவிகள் காயம்
சாத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து: 27-க்கும் மேற்பட்ட மாணவிகள் காயம்

By

Published : May 7, 2022, 10:37 AM IST

Updated : May 7, 2022, 12:57 PM IST

விருதுநகர்:சாத்தூர் அருகே சடையம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் மற்றும் கரிசல்குளம் பகுதியிலிருந்து சுமார் 60 மாணவிகள் வந்த தனியார் கல்லூரி பேருந்தினை திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த கணபதி (63) என்பவர் ஓட்டி வந்தார்.

சாத்தூர் ஒ.மேட்டுப்பட்டி அருகே பேருந்து சென்ற போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர மரத்தில் மீது மோதியது. இந்த விபத்தில் 27 மாணவிகள் காயமடைந்தனர்.

இந்த நிலையில் கல்லூரி பேருந்து விபத்தில் காயமடைந்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவிகளை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், தனியார் கல்லூரி பேருந்து விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவிகளின் மருத்துவச்செலவை அரசே ஏற்கும் என்றார்.

மேலும் தனியார் கல்லூரி பேருந்து விபத்து காயமடைந்த மாணவிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Video: கல்லூரி மாணவிகள் பேருந்தில் தொங்கி செல்லும் அவல நிலை!

Last Updated : May 7, 2022, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details