தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிதிநிலை சீரானதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் பேச்சு

நிதி நிலைமையைச் சரிசெய்த பின் திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியுள்ளார்.

அமைச்சர் ராமச்சந்திரன்
அமைச்சர் ராமச்சந்திரன்

By

Published : Aug 7, 2021, 8:17 AM IST

தமிழ்நாட்டில் உள்ள முதியவா்கள் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தை நேற்று விருதுநகா் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெத்துரெட்டிபட்டியில் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ரகுராமன், சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் அசோகன், சுகாதாரத் துறை அலுவலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் விழாவில் பேசிய அமைச்சர், "கடந்த அதிமுக ஆட்சியில் கரோனா தொற்றால் வேலையிழந்த மக்களுக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் ரூ.4,000 கொடுக்கப்பட்டது.

திமுகவின தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் எராளமானோர் கடன் வைத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். குழந்தைகளின் படிப்புக்கான ஸ்டாலின் சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்.

நமது கஷ்டங்களைத் தெரிந்த ஒரு முதலமைச்சர் கிடைத்திருக்கிறார். எங்கள் ஆட்சியில் உங்களுக்கு எல்லாமே நல்லதாக நடக்கும்" எனப் பேசினார்.

இதையும் படிங்க:அண்ணாமலைக்கு பயப்பட தேவை இல்லை - அமைச்சர் கே.என்.நேரு

ABOUT THE AUTHOR

...view details