தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மினி லாரியில் தீ விபத்து; ரூ.5 லட்சம் பொருள் சேதம் - மின் கம்பி உராய்ந்து

விருதுநகர்: சாத்தூரில் தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து தீக்குச்சி கழிவுகளை ஏற்றி வந்த மினி லாரியில், மின்சார வயர் உரசி தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

mini lorry fire accident

By

Published : Jul 8, 2019, 7:57 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து தனியார் தீப்பெட்டி ஆலையின் தீக்குச்சி கழிவுகளை மினி லாரி மூலம் இன்று ஈரோடு, காளையார்கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றி அனுப்பப்பட்டது. லாரி சாலையில் சென்று கொண்டிருந்தபோது மின் கம்பத்தில், வண்டியில் இருந்த தீக்குச்சி மூட்டைகள் உரசியதால் தீப்பற்றிக் கொண்டது. இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனே லாரியை நிறுத்தி கீழே இறங்கினார்.

தகவலறிந்து சாத்தூர் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் மினி லாரி முழுவதுமே தீ பற்றி கொண்டது. பின்னா் நீண்ட போராட்டத்திற்கு பின்னா் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. இதனால் முதியோர் முதல் குழந்தைகள் வரை பெரிதும் பாதிக்கபட்டனா். விபத்தில் மினி லாரி உள்பட ஐந்து லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து தேசமடைந்தன.

மின் கம்பி உராய்ந்து மினி லாரியில் தீ விபத்து

ABOUT THE AUTHOR

...view details