தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் பால் கறக்க சென்றவர் கொலை!

விருதுநகர்: சிவகாசி அருகே அதிகாலையில் பால் கறக்க சென்ற நபர், அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ilk
milk

By

Published : Sep 21, 2020, 5:26 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ராணி அண்ணா காலனியைச் சேர்ந்தவர் முனியசாமி(53). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று, வழக்கம்போல அதிகாலை அவரது வீட்டின் அருகே பால் கறக்க முனியசாமி சென்றுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் முனியசாமியை வெட்டிப் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த முனியசாமியை, அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிவகாசி நகர் காவல் துறையினர், தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details