தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூரில் கூலித் தொழிலாளி கொலை; இருவர் கைது! - kollurpatti murder two were arrested

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கொள்ளுர்பட்டியில் கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் இருவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Mercenary killed in Srivilliputhur Two were arrested
ஸ்ரீவில்லிபுத்தூரில் கூலித் தொழிலாளி கொலை; இருவர் கைது!

By

Published : Feb 8, 2021, 5:00 PM IST

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கொள்ளுர்பட்டி தெருவைச் சேர்ந்த சிவலிங்கம் (55), அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, அண்ணாமலை என்ற மகாலிங்கம் ஆகியோர் கூலித் தொழில் செய்து வருகின்றனர்.

சிவலிங்கம் அவரது வீட்டில் மனைவியோடு இருந்தபோது, அண்ணாமலை என்ற மகாலிங்கம் சிவலிங்கத்தை வெளியே அழைத்துவந்துள்ளார். அப்போது, சிவலிங்கத்தின் வீட்டின் வெளியே இருந்த வெள்ளைச்சாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவலிங்கத்தின் தலையில் தாக்கியதோடு மார்பிலும் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சிவலிங்கத்தை அவரது மகன் உள்ளிட்டோர் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிவலிங்கம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சிவலிங்கத்தின் மனைவி புஷ்பம் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் சிவலிங்கத்தை கொலை செய்த வெள்ளைச்சாமி, அண்ணாமலை என்ற மகாலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கொலை சம்பவத்தால் கொள்ளுர்பட்டி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இக்கொலை, முன்விரோதத்தால் நடைபெற்றதா? அல்லது வேறு காரணத்திற்காக நடைபெற்றதா? என்பது குறித்து காவலர்கள் தொடர் விசாரணை நடத்திருகின்றனர்.

இதையும் படிங்க:ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 24 சவரன் நகை கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details