விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (மார்ச் 16) அமமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் ராஜவர்மன் தலைமையில் நடைபெற்றது.
சாத்தூர் அமமுக செயல் வீரர்கள் கூட்டம் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி
கூட்டம் முடிந்த பின் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி, அமமுக வேட்பாளர் ராஜவர்மன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, "வேட்பாளர் பட்டியலை சரிசெய்ய முடியாத முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகிய இருவரும் ஆட்சி, கட்சியையும் எப்படி நிர்வாகிக்க முடியும்.
மோடி ஜி, அமித் ஷா ஜி, நட்டா ஜி ஆகியோரின் பார்வை தமிழ்நாடு அமைச்சர்கள் மீது குறைந்துவிட்டது. தேர்தல் முடிந்தவுடன் இவர்கள் அனைவரும் டெல்லி திகார் சிறைக்குச் செல்வது உறுதி.
2010 திமுக தோல்வி
2010ஆம் ஆண்டு திமுக தோல்வியைத் தழுவியது. அதற்குக் காரணம், அப்போதைய அமைச்சர் ஆற்காடு வீராச்சாமியின் ஊழலால், திமுக தோல்வியைத் தழுவியது. அதைப்போல் S.P. வேலுமணியின் ஊழலால், அதிமுக படுதோல்வி அடையும்", என சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பேசிய, அமமுக வேட்பாளர் ராஜவர்மன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: மேளதாளங்களுடன் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல்செய்த அமமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்!