விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்குப் பல்வேறு பகுதிகளிலிருந்து புற நோயாளிகள், வெளி நோயாளிகள் என ஒரு நாளைக்கு 500-க்கும் மேற்பட்டோர் வந்துசெல்கின்றனர். மேலும் தற்போது உள்ள காலகட்டத்தில் கரோனா நோயாளிகள் 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
அரசு மருத்துவமனை வளாகத்திலேயே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்: பொதுமக்கள் அச்சம் - மருத்துவ கழிவுகள்
விருதுநகர்: மருத்துவக் கழிவுகளை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலேயே கொட்டப்படுவதால் நோயாளிகள், பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் இடர் ஏற்பட்டுள்ளது.
நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் பிபி கிட் உடை அணிந்தும் பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளித்துவருகின்றனர்.
ஆனால் மருத்துவர்கள் சிகிச்சை முடிந்த பின்னர் அவர்கள் பயன்படுத்திய பிபி கிட் உடை, கையுறை, ஊசி மருந்துகள், அறுவை சிகிச்சை முடிந்தபின் அகற்றப்படும் மருத்துவக் கழிவுகளை அரசு மருத்துவமனை நவீன சமையலறைகூடத்தின் பின்புறம் குவியல் குவியலாகக் குவித்துவைத்துள்ளனர்.
இதனால் அருகில் இருக்கும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும் மேலும் நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் ஊழியர்களுக்கும் நோய்த்தொற்று பரவும் இடர் ஏற்பட்டுள்ளது.