தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி: தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு! - தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகர் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியின் போது, 5 ஆவது மாடியில் இருந்து தவறி விழந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

By

Published : Jan 22, 2021, 6:29 AM IST

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 5 மாடி கட்டிடம் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. கட்டுமான பணியில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி 5 ஆவது தளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி இன்று (ஜன.21) காலை நடைபெற்றது. அப்பொழுது தடுப்பு சுவர் அருகே நின்று கான்கிரீட் கலவையை, கூரைக்குண்டு பகுதியைச் சேர்ந்த முருகன் (45) எடுத்த கொண்டிருந்தார். அப்போது அவர் அங்கிருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து சூலக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தொழிலாளியின் உறவினர்கள் இழப்பீடு கேட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:விசாகப்பட்டினத்திலிருந்து கஞ்சா கடத்தல், இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details