விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (47). இவர் இந்தப் பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்திவருகிறார். இவர் மதிமுக கட்சி நிர்வாகியாகவும் உள்ளார். அதே ஊரைச் சேர்ந்த மாரிமுத்து (20) என்பவர் சிவக்குமார் வீட்டின் அருகே அமர்ந்து இரவுவேளையில் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை சிவக்குமார் அடிக்கடி கண்டித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு சிவக்குமார் வீட்டின் அருகே அமர்ந்து மாரிமுத்து மது அருந்தியுள்ளார். அதைப்பார்த்த சிவகுமார், மாரிமுத்துவை கண்டித்து எச்சரித்து அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து தனது வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்துவந்து சிவக்குமாரை பின்புறமாக சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.