விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சட்டப்பேரவை உறுப்பினரும் காங்கிரஸ் கொறடாவுமான மாணிக்கம் தாகூர், கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விருதுநகரில் இன்று வரை45 வயது மேற்பட்ட 1,21,749 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனாவின் இரண்டாவது அலை மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என்று உலகமே அஞ்சுகிறது. எனவே, 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருமே கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு கரோனா முதல் அலையைக் கட்டுப்படுத்தியதற்கான பெருமையை எவ்வாறு எடுத்துக் கொள்கிறதோ அதைப் போல் பழியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கரோனா காலத்தில் என்ன செய்தார், என்ன செய்யவில்லை என்பதை நாம் அறிவோம்.