தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ராஜேந்திர பாலாஜி ஒரு மங்குனி அமைச்சர்’ - விருதுநகர் எம்.பி காட்டம்! - விருதுநகர் எம்.பி

விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு மங்குனி அமைச்சர் என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக் தாகூர் விமர்சித்துள்ளார்.

விருதுநகர்

By

Published : Sep 23, 2019, 3:59 PM IST

விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக் தாகூர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அமெரிக்க சுற்றுப் பயணத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. சுற்றுப்பயணம் முடிந்தது முதல் எதிர்க்கட்சி தலைவர்கள், ராகுல் காந்தி என அனைவரையும் தரக்குறைவாகப் பேசி வருகிறார். அவரைப் போல் எங்களால் பேச முடியாது.

விருதுநகர் எம்.பி

சிவகாசி மக்களை அவரிடமிருந்து காக்க வேண்டும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாவடக்கத்துடன் நடத்துகொள்ள வேண்டும். அவர் ஒரு மங்குனி அமைச்சர். வெள்ளை அறிக்கை கேட்டால் பச்சை அறிக்கை தருவதாக மங்குனி அமைச்சர் கூறுகிறார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாட்டின் இரு தொகுதி மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details