தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைகோ மக்களால் புறக்கணிக்கப்பட்ட தலைவர்! மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு - virudhunagar

விருதுநகர்: வைகோ மக்களால் புறக்கணிக்கப்பட்ட தலைவர் என்று விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

manickam-tagore-blaming-vaiko

By

Published : Aug 9, 2019, 5:52 PM IST

விருதுநகரில் தனியார் அமைப்பு சார்பாக ஓவியக் கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கொறடாவும் விருதுநகர் தொகுதி எம்.பி-யுமான மாணிக்கம் தாகூர் தொடங்கி வைத்தார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் "வைகோ மக்களால் புறக்கணிக்கப்பட்ட தலைவர். காஷ்மீர் மக்களை இதுவரை காப்பாற்றியது காங்கிரஸ் கட்சிதான். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாக சிறப்புச் சட்டம் 370-ஐ காப்பற்றிய கட்சி காங்கிரஸ்.

மாணிக்கம் தாகூர் பேட்டி

காங்கிரஸ் கட்சி யாருக்கும் துரோகம் செய்யவில்லை. துரோகம் வைகோவிற்க்கு சொந்தமான சொத்து. மதசார்பற்ற கூட்டணிக்கு வைகோவை நாங்கள் அழைக்கவில்லை. மோடி, அமித்ஷாவிடம் நல்ல பெயர் வாங்க வைகோ காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கிறார். பொய்களை சொல்லி சொல்லி பிழைப்பு நடத்துபவர் வைகோ" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details