தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ஆட்சி முடிந்ததும் அதிமுக அமைச்சர்களுக்கு காவி டவுசர்’

விருதுநகர்: அதிமுக ஆட்சி முடிந்ததும் அக்கட்சியின் அமைச்சர்கள் காவி டவுசர் மாட்டிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் சாகாவில் கலந்துகொள்வார்கள் என விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

manicka-tagore

By

Published : Oct 10, 2019, 11:40 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ரயில்வே நிலையத்தில் விருதுநகர் மக்களவை தொகுதியின் உறுப்பினரும் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற கொறடாவுமான மாணிக்கம் தாகூர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் சாத்தூர் ரயில் நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ரயில் நிலையத்தில் உள்ள குடிநீர் வசதிகள் பற்றியும் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருக்கும் அறையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கட்சியில் உள்ளவர்கள் பணத்தால் வாக்குகளை வாங்க முடியும் என்று கருதுகிறார்கள்.

விருதுநகர் எம்.பி. சாத்தூர் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார்

ஆனால் தற்போது மக்கள் தமிழ்நாட்டில் நடக்கும் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

இந்த ஆட்சி முடிவுக்கு வந்த பின்னால் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் ஆகிய இரண்டு பேரும் பாஜகவில் இணைந்து ஆர்.எஸ்.எஸ் சாகாவில் டவுசர் மாட்டிக்கொண்டு கலந்துகொள்வார்கள் என்றார்.

மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பு

மேலும், நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றால் கே.டி.ராஜேந்திர பாலாஜி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய தயாரா ? " என்று சவால் விடுத்தார்.

இதையும் படிங்க:நீட் ஆள்மாறாட்ட வழக்கு - ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details