தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாசு ஆலை தீ விபத்து - ஒருவர் காயம்! - firework factory fire accident

விருதுநகர்: இரவார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

பட்டாசு ஆலை தீ விபத்து
பட்டாசு ஆலை தீ விபத்து

By

Published : Nov 4, 2020, 7:06 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இரவார்பட்டியில், சிவகாசியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்குச் சொந்தமான அணில் பயர் ஒர்க்ஸ் என்னும் பட்டாசு ஆலை உள்ளது. அங்கு 80 அறைகளுக்கு மேல் உள்ளன. 150-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகின்றனர்.

இந்த நிலையில், உராய்வு காரணமாக தீ பற்றத்தொடங்கியது, அதில் ஊர்தேவன் (42) என்பவர் படுகாயம் அடைந்தார். தீ உடனே அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தடுக்கப்பட்டது. தற்போது அவர், சிவகாசி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இதையும் படிங்க:ஆறு பட்டாசு கடைகளில் வெடி விபத்து

ABOUT THE AUTHOR

...view details