தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் நிலையம் முன்பு தீக்குளித்த நபரால் பரபரப்பு! - திருத்தங்கல் தற்கொலை முயற்சி

சிவகாசி அருகே திருத்தங்கலில், காவல் நிலையம் முன்பு நேற்று முன்தினம்(ஜூலை 19) இரவு தீக்குளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

man-trying-to-committed-suicide-in-thiruthangal
காவல்நிலையத்தின் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

By

Published : Jul 21, 2021, 7:34 AM IST

Updated : Jul 21, 2021, 1:50 PM IST

விருதுநகர்:சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜன். இவர், அதே பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவரது பட்டாசு ஆலையில் உள்வாடகை கொடுத்து பட்டாசு ஆலையை நடத்தியுள்ளார். இதற்காக, சுந்தரிடம் 2 லட்சம் ரூபாய் கொடுத்து ஒப்பந்ததமும் போட்டுள்ளார்.

இந்நிலையில், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட, பணத்தை காளிராஜன் திருப்பிக்கேட்டுள்ளார். பணத்தை தரமுடியாது என மிரட்டி அனுப்பிய சுந்தர் மீது திருத்தங்கல் காவல்நிலையத்தில் காளிராஜன் பத்து நாள்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்ததால் நேற்று முன்தினம் இரவு திருத்தங்கல் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது, தன்னை காவல்துறையினர் தரக்குறைவாக பேசியதாக கூறி காவல்நிலைய வாசலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை அறிந்து அங்கு விரைந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபு பிரசாத், மருத்துவமனைகக்குள் யாரும் செல்லக்கூடாது, செய்தியாளர்கள் யாரும் படம் எடுக்கக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தீவிர சிகிச்சை பரிவில் கதவை அடைத்தார்.

சுமார் மூன்று மணி நேரம் தொடர்ந்து செய்தியாளர்கள் வாக்குவாதம் நடத்தியதைத் தொடர்ந்து கதவு திறக்கப்பட்டது.

தற்கொலை எண்ணத்தை தவிருங்கள்

''எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதுபோன்ற தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினை தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிட அரசும், சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் காத்திருக்கின்றன”

உதவிக்கு அழையுங்கள்:

அரசு உதவி மையம் எண் - 104 சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060

இதையும் படிங்க:வாகனத்தை கொளுத்திய உதவி ஆய்வாளர்

Last Updated : Jul 21, 2021, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details