விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன், இவரது மனைவி தமிழ்செல்வி ஜூலை 2ஆம் தேதி டிராக்டரில் செங்கல் ஏற்றி வரும்போது, செங்கல் மீது அமர்த்திருந்த அவர் தீடீரென கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என தமிழ்செல்வியின் கணவர் கணேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி இறந்த சோகம் - கணவனும் தற்கொலை! - husband suicide
விருதுநகர்: விபத்தில் மனைவி இறந்த வழக்கை முறையாக காவல்துறையினர் விசாரணை நடத்தாததால் சோகத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி இறந்த சோகம் ! கணவனும் தற்கொலை
இந்நிலையில் கணேசனின் உறவினர்கள் காவல்துறையை கண்டித்து முறையான விசாரணை நடத்தக்கோரி 100க்கும் மேற்ப்பட்டோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவனை முன்பு 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.