விருதுநகர் மாவட்டம் சின்ன சுரைக்காய்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் நாய் பண்ணை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது காரை அப்பகுதியிலுள்ள அலுவலகம் அருகே நிறுத்தியுள்ளார். இந்நிலையில் திடீரேன கார் தீப்பிடித்து எரியத்தொடங்கியுள்ளது.
இதில், காரின் முன்பகுதி முழுவதும் மளமளவென எரிந்து, தீப்பற்றியதைக் கண்ட அருகிலிருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜபாளையம் தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.