கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை சாதகமாக பயன்படுத்தி தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக அந்தந்த மாவட்ட காவல் துறையினருக்கு பொதுமக்கள் புகார்கள் அளித்து வந்தனர். அதன்படி காவல் துறையினரும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூரில் ஒருவர் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக சேத்தூர் காவல் துறையினருக்கு புகார்கள் வந்தன.
விருதுநகரில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவர் கைது
விருதுநகர்: ராஜபாளையம் அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில், சேத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த அய்யாச்சாமி (40) என்பவர் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 110 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறலை அழித்து, 5 லிட்டர் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:புதுக்கோட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற ஒருவர் கைது