விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தோணுகால் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டியப்பன் என்பவரின் மகன் பாலமுருகன். இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் மது, கஞ்சாவிற்கு அடிமையாகி ஊரைச் சுற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாலமுகன் செலவிற்காக பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார் அதற்கு அவர்கள் இப்படியே வேலைக்கு போகாமல் ஊரை சுற்றிக்கொண்டிருக்காதே, வேலைக்கு செல் பணமெல்லாமல் தரமுடியாது என திட்டியுள்ளனர்.
105 வயது மூதாட்டியை கொன்ற பேரன் கைது! - Man arrested for killing his 105-year-old grandmother
விருதுநகர்:அருப்புக்கோட்டை அருகே மது குடிக்க பணம் தர மறுத்ததால் 105 வயது மூதாட்டியை அரிவாள்மனையால் கொடூரமாகக் கழுத்தை அறுத்துக் கொன்ற பேரனை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெற்றோர் பணம் தராத ஆத்திரத்தில் அவர்களுடன் சண்டையிட்டு தனது 105 வயது பாட்டி கருப்பாயியிடம் சென்று பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரும் நீ குடிப்பதற்குத் தான் பணம் கேட்பாய் உனக்கு பணம் தரமுடியாது ஒழுங்காக வேலைக்கு செல் என கூறி பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் அருகிலிருந்த அரிவாள்மனையை எடுத்து பாட்டியின் கழுத்து, தலை பகுதியில் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு காதில் அணிந்திருந்த தோடை காதோடு அறுத்து எடுத்து கையில் வைத்துக்கொண்டு அதே இடத்தில் அமைதியாக அமர்ந்துள்ளார்.
பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அக்கம்பக்கத்தினர் கருப்பாயி கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் கருப்பாயியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பாலமுருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.