விருதுநகர் மாவட்டம் வில்லிபத்திரியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (23), ரோசல்பட்டி பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா (20) இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்துவந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் வீட்டுக்குத் தெரிந்ததால் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த காதல் இணையர், இறப்பிலாவது இணையலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
இருவரும் சூலக்கரை பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்குச் சென்று அங்கு வந்த திருச்சி நோக்கிச்செல்லும் விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை-செய்துகொண்டனர். இதில் இருவரது உடல்களும் சிதறிவிட்டன.