விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நரிக்குடி திருச்சுழி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மணல் திருடப்பட்டு வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டினர். இதனைத் தொடர்ந்து மணல் கடத்தல் நடப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட இடங்களில் காவல்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.
மணல் திருடிய இரண்டு லாரிகள் பறிமுதல்! - Lorry seized
விருதுநகர்: மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு லாரிகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
லாரி
இந்நிலையில், திருச்சுழிபகுதியில் முறைகேடாக மணல் அள்ளிய இரண்டு மணல் லாரிகள் திருச்சுழி உடையனேந்தல் பகுதியில் வந்துகொண்டிந்தபோது திருச்சுழி காவல்துறை ஆய்வாளர் அனிதா இரண்டு லாரிகளையும் மடக்கிப்பிடித்தார். அப்போது ஒரு லாரி ஓட்டுநர் லாரியைப் பாதியிலேயே விட்டு விட்டு தப்பி ஓடினார்.இதனையடுத்து அனிதா இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.