மதுரை மாவட்டம் புளியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் பக்ரூதின். இவர், இன்று தனது ஏழு வயது மகன் இப்ராஹீமுடன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில், சிறுவன் மீது லாரி டயர் ஏறியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.