தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையை ஆற்றும் முதியவர்கள்! - Election of 11 panchayat unions in Virudhunagar

விருதுநகர்: 11 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையை ஆற்ற முதியவர்கள் ஆர்வத்துடன் சென்று வாக்குகளை செலுத்தினர்.

election
election

By

Published : Dec 27, 2019, 11:33 AM IST

விருதுநகர் மாவட்டம் 11 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டத் தேர்தல் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, சிவகாசி ஆகிய ஐந்து ஒன்றியங்களில் நடைபெறுகிறது.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என ஆயிரத்து 861 பதவிகளுக்கு 5ஆயிரத்து 228 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 10 லட்சத்து 43 ஆயிரத்து 582 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் நடைபெற உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இன்று வாக்குகளை செலுத்துகின்றனர்.

தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையை ஆற்றும் முதியவர்கள்

ஆயிரத்து 28 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 7 ஆயிரத்து 774 வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா அவரது குடுப்பத்தினருடன் சென்று வாக்களித்தார். தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்!

ABOUT THE AUTHOR

...view details